குயவர்பாளையம், கொசக்கடை, ஆகிய பெயர்கள்

கைவினைஞரான குலாளர் சமூகத்தை,

நம் நினைவிற்கு கொண்டு வருகிறது.

கோட்டக்குப்பத்தில் கூட, குயவர்கள் தொழில் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

புதுவை அரும்பார்த்தபுரத்தில் கூட, மண் கலயங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

கொசக்கடைத் தெருவில்,

மத்திய சிறைச்சாலைக்கு

பின் பக்கத்தில், பானைகள், சட்டிகள் விற்கும் சந்தை இப்போதும் உண்டு.




அலுமினியம் 60களில் ஊடுருவல் செய்தது. அடுத்து, எவர்சில்வர்,(நிலைவெள்ளி) அதற்கடுத்து, பிளாசுடிக்(ஞெகிழி).

இவைகள் விடை கொடுத்து அனுப்பின,

விரைவாக மண்பாண்டங்களை. புதிய பாணி வாழ்க்கை

முறைகள் உலை வைத்தன,

பூர்விக மண்ணின் அம்சங்களை.

ஒரு காலத்தில் அனைத்து பிரிவு மக்களின் சமையல்

பாத்திர தேவைகளை பூர்த்திசெய்த,

மிக அடிப்படையான தொழில் பிரிவு

மக்களான குயவர்கள்,மண் உடையார் என்றும் அழைக்கப்பட்டனர்.



இம்மக்கள், மதம், கலாச்சாரத் துறைகளில்,

குறிப்பாக பொம்மைகள், குதிரைகள், வீரர்கள், சாமி உருவங்கள்,

கோவில் கோபுரங்களில் வைக்கும் கலசங்கள்,

கும்பங்கள், கரகாட்டத்திற்கு கலயங்கள் என்பன போன்ற பிற படைப்புகளிலும், பண்பாட்டு முத்திரையை, தனிப் பதிவுகளை ஏற்படித்தினர். தற்போது, இவர்கள் முகவரி இல்லாத கடிதங்கள், செல்லுபடியாகத நாணயங்கள்.

இலைப் பூ




பூவின் இதழ்
நிரப்பிய தேன்மணம்
வழிமூடிக் கிடந்த
முட்காட்டின்உள்நுழைய
எத்தனித்த பட்டாம்பூச்சியொன்று.
கூர்நுனிகள் எகிறபிய்த்தெறிய
முனைந்த விரல்களில்ரத்தகிரீடம்
சூட்டிப்பார்க்க முயலும்கவிந்த
இருளின் மௌனம்.
வெள்ளைப்பகல் உடைபட்டுச்
சிதறகையளவு கனவு
ஏந்தி ராப்பிச்சை
கேட்கும்தாடிக்காரனின்
மடியில் ஒரு ஷோடிக்
கிளிகள்பட்டாம்பூச்சி
உட்கார நினைத்த
இலைப்பூவின்
மீதுவானயோனிவிரிய
விழும் பனித்துளி.



கொக்குகள் மேலே பறக்கின்றன.
தப்பிய வயலின் தானியமோ
மக்காத குப்பைகளின் புழுக்களோ
அதன் அலகுகளில் ஞாபகங்களாய் நெளிகிறது.
விரல் நகங்களுக்கு வெண்பூக்கள்
வேண்டிசிறுவர்கள் யாசிக்கையில்
அவைகள் தரையிறங்குகின்றன.
நீளமான காலின் அதிசயங்களைகரைகளில்
விட்டுவிட்டுசிறுவர்கள்
மறைந்து விடுகிறார்கள்.
கருவேலங் குத்தாரிகளிலும்மீன்கள்
கருத்தரிக்கும் ஆதாளைச் செடி
மருங்கிலும்கால்களை வீடாக்கி வசிக்கின்றன.
ஊரின் நிர்வாணங்கள் வற்றும் அவைகளின்
கண்களில்துள்ளும் மீன்களை சிலர்தூண்டிலிட்டுக்
கொண்டு போகிறார்கள்.
சாம்பல் தோய்ந்த பூசணி
விதைகளைஉலர்த்தும் வெயில்


மாந்தளிர்களைப் பச்சையாக்குகிறது.
பின்பனிக்காலத்தோடு புறப்பட்டுவிட்ட
சிறுமிகளுக்கு தோழிகள்
கையசைக்கையில்வறண்டுவரும்
குளத்தினைக் கொத்திக்கொண்டுபறந்து
செல்கிறது கடைசிக் கொக்கு.
தமிழ் சினிமா இயக்குனர்கள் கிராமத்தின் சிறுதெய்வங்களைக் காட்ட வேண்டுமென்றால், அல்லது குறுஞ்சாமிகளின் உக்கிரங்களைப் பிரம்மாண்டமாகக் கலை அழகுடன் காட்ட வேண்டும் எனறால் கேமராவைத் தூக்கிக் கொண்டு நேரே, கிராமங்களின் ஊர் எல்லைகளில் இருக்கிற காவல் தெய்வமான ஐயனார் குதிரை வாகனத்தில் வீற்றிருக்கிற இடத்திற்குச் சென்றுவிடுகிறார்கள்.
ஏனென்றால், இந்த ஐயனார் அமர்ந்திருக்கும் குதிரைகளின் வண்ணங்களும், வடிவங்களும் பார்ப்பவரைப் பரவசப்படுத்துகின்றன. இந்த பிரம்மாண்டமான ‘கலை’ச் செல்வத்திற்குப் பின்னால் தெய்வ நம்பிக்கையும், கலைத்திறனும், கடின உழைப்பும் இருக்கிறது. இச்சாமிகளுக்குப் பின்னால் பல்வேறு நாட்டார்சொல் கதைகளும் விதவிதமாக உள்ளன.
“குதிரை எடுப்பு ‘அல்லது’ குதிரை வெட்டு என்று சொல்கின்ற இந்த கலைக்குப் பின்னால் இருக்கும் ரசனையான சேதிகளை மட்டும் இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளேன்.
இக்கலை ‘குயவர்கள்’ என்ற தனி இனக் குழு மக்களால் பரம்பரை, பரம்பரையாகக் கையாளப்படுகிறது.
ஐயனார்சாமியையும், அவர் அமர்ந்திருக்கிற குதிரையையும், விதவிதமாகக் காலங்காலமாகக் குயவர் இன மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இக்கலையை ‘ஒரு தெய்வீகக் கடமை’ என்ற மனசாட்சியுடன் இவர்கள் செங்யகிறார்கள்.
பெரிய, பெரிய குதிரை வாகனங்களைத்தான் இவர்கள் அதிகமாகச் செய்கின்றார்கள். குதிரைகளைத் தவிர மாடுகளின் சிலைகளையும், பெருச்சாளி போன்ற வாகனங்களையும் இவர்கள் தேவை எனில் செய்து கொடுக்கிறார்கள்.
சகலவிதமான சிறு தெய்வங்களின் உருவங்களையும் குயவர்க்ள் சுடுமண் ‘சுதை’களாகச் செய்து விடுகிறார்கள்.
ஒரு காலத்தில் இக்குயவர்களின் வாழ்வும், தமிழ்ச் சமூக மக்களின் வாழ்வும் பின்னிப் பிணைந்து கிடந்தது.
மண்ணால், தெய்வச் சிலைகளையும், வாகனங்களையும் செய்கிற இக்குயவர்களின் ஒரு பிரிவினர், சட்டி பானைகளையும், மண் அடுப்புகளையும் செய்து அவற்றை மக்களிடம் கொண்டு சென்றார்கள்.
இன்றைய உலகமயமாக்கலால் உருத்தெரியாமல் போனதில் இந்தக் கலையாளர்களின் மதிப்பும், மரியாதையும் கௌரவம்தான்.
குலாலர்கள்தான் இன்றும் கிராமாந்தாரங்களில் குலதெய்வங்களுக்கும் சிறுதெய்வங்களுக்கும் பூசாரிகளாக விளங்குகின்றார்கள். குழந்தை பிறந்தால் கிராமத்து மக்கள் நேரே கோயில் பூசாரியான குயவரிடம் சென்று தன் குல தெய்வத்திற்கு பூஜை வைக்கச் சொல்வார்கள்.
அதே குழந்தை வளர்ந்து வாலிபமாகி, திருமணம் முடிந்து பிள்ளை குட்டிகளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து முதியவராகிச் செத்த பிறகும் இதே குயவரிடம் சென்று கொள்ளிக் குடம் உடைக்க பானை கேட்டு நிற்கிறார்கள். இப்படி மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை குலாலர்களின் ‘தேவை’ அன்றைய தமிழ்ச் சமூக மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தது. இது தவிர, மக்கள் வணங்குகின்ற சிறு தெய்வங்களையும், பூரண கும்பங்களையும் அக்கினிச் சட்டிகளையும், ஆயிரம் கண் பானைகளையும் கலையழகுடன் செய்து கொடுக்கும் கலைஞர்களாகவும் இவர்கள் திகழ்ந்தார்கள்.
குயவர்கள் பாண்டங்களையும், மண்குவளைகளையும் பல்வேறு உருவங்களையும், சாம்பிராணி போட உதவும் சட்டிகளையும், குழந்தைகள் வைத்து விளையாட பொம்மைகளையும், ஏன் பெண்கள் காதில் அணிந்துகொள்ள ஒரு வித நகைகளையும் கூட இவர்கள் ஒரு காலத்தில் கலைநயத்துடன் செய்து கொடுத்தார்கள்.
கிராம தேவதைகளுக்கும், குறுஞ்சாமிகளுக்கும் இவர்களே பூசாரிகளாகவும் திகழ்ந்தார்கள். மக்களின் வழிபாட்டு முறைகளுக்கும், சடங்கு, சம்பிரதாயங்களுக்கும் தமிழ்ப்பண்பாட்டில் இக்குயவர்களுக்கு முக்கியமான ஒரு இடம் உண்டு.
குலாலர்களை மையமாகக் கொண்டு கதை சொல்லிகள் இன்னும் விதவிதமான சொல்கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

குயவர்கள் செய்யும் மண்பானையை, சித்தர்களும், ஞானவான்களும், நிலையாமை ’ என்ற தத்துவத்தை விளக்க ஒரு குறீயீடாகப் பயன்படுத்தினார்கள்.
குயவர் ஒரு வித மருத்துவர்களாகவும், மாந்திரிகர்களாகவும் உள்ளார்கள். ‘அக்கி’ என்பது ஒரு நோய். வெயில் காலத்தில் பெரிய கொப்பளமாகப் பழுத்து உடம்பில் காணப்படும் இந்த நோய்க்கு ‘அக்கி’ என்று பெயர்.
இந்த கொப்பளம் உடைந்து சலம் வெளியேற அக்கி எழுதுதல் என்ற மருத்துவத்தை இக்குயவர்கள் செய்தார்கள்.
காவிக்கல்லையும், தெக்கம்பாக்கையும்(பாக்கில் ஒரு வகை) பொடி செய்து ஒரு சிரட்டையில்(கொட்டாங்குச்சியில்) போட்டுத் தண்ணீர் விட்டுக் கோழி இறகால் கரைத்த கரைசலை அக்கி என்ற நோய் வந்த இடத்தில் தடவுவார்கள். பிறகு அதே காவிக்கரைசலைக் கொண்டு ஒரு கோழி முட்டையின் மீது மனித முகம் ஒன்றை வரைவார்கள்.
சிரட்டையில்(தேங்காய் ஓடு) உள்ள மருந்தை நோயாளியிடம் கொடுத்து மீண்டும் மீண்டும் அக்கி என்ற கொப்பளத்தின் மேல் போடச் சொல்வார் குயவர்.
முகம் எழுதிய முட்டையை உடையாமல் எடுத்து வைத்திருந்து குயவர் அவித்து தின்று விடுவார். இதனால் நோயாளியின் ‘அக்கி’ முட்டையின் மீது முகமாக இடம் பெற, அதை அவித்து குயவர் தின்பதால், அக்கி எனற கொப்பளமும் அவிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
இச்செயல்பாட்டில், ‘பாவனை மந்திரம்’ என்ற உளவியல் கோட்பாடு செயல்படுகிறது. காவிக்கரைசல் மருத்துவ குணம் உடையது என்பதையும் இங்கு நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ‘மதி முக்கால்; மந்திரம் கால்’ என்ற பழமொழியின்படி ‘அக்கி எழுதுதல்’ என்ற மருத்துவத்தை குயவர்லர்கள் நோயாளிகளுக்குச் செய்து வந்தார்கள்.
பிராமணர்களைப் போல இவர்கள் இன்றும் (குலால மரபில் பிறந்த ஆண்கள்) பூணூல் போட்டுக் கொள்கிறார்கள். இதை ஒட்டியும் ஒரு சொல்கதை வழக்கில் உள்ளது.
‘யானைக்கும் பானைக்கும் சரி’ என்ற கதையும் குயவர்களின் வாழ்வியலில் இருந்து பிறந்ததுதான். குயவர்களின் வம்சாவழி மரபு வந்ததற்குப் பின்னால், சில புராண மரபுக்கதைகளும் உள்ளன.
சட்டி, பானைகளைச் செய்வதற்கு இவர்கள் ‘மணமண்’ என்ற மண் கலவையை உருவாக்குகின்றார்கள். குதில்(குதிர்), மண் சிலைகள் போன்றவைகளைச் செய்ய ‘சண்டு மண்’ என்ற மணகலவையை உருவாக்குகிறார்கள். தன் தொழிலுக்கு ஏற்ற மண் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மண் சேர்க்கை, மணகலவை பற்றிய நுட்பமான அறிவு இவர்களுக்கு தன் மரபில் இருந்து இயற்கையாகக் கிடைத்து விடுகிறது.
இவர்களுக்கு ‘சுழலும் மனை’ யும், சூளை(சுள்ளை)யும் தான் பிரதானமாகும். குயவர்கள் வெறும் மண்ணை அடுப்பாகவும், பொங்கல் பானைகளாகவும்(சாப்பிட) சாமிகளாகவும்(வணங்க) ஆக்கி விடும் பிரம்மாக்களாகத் திகழ்கின்றார்கள்.
இவர்கள் பிசைந்த மண்ணை, மனையின் மேல் வைத்து, மனையைச் சுழல விட்டு, விதவிதமான பாத்திரங்களை தன் கைவிரல்களின் நெளிவு, சுளிவுகளால் செய்யும் நேர்த்தியை அருகில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருந்தாலும் திகட்டாது. இவர்களுக்கு மட்டும் படைப்பே பிழைப்பாகவும் வாழ்வாகவும் ஆயிற்று. குயவரின் சுழலும் மனை சொல்லும் தத்துவங்கள்தான் எத்தனை?!
தட்டுப்பலகை, தட்டுக்கல், கிள்ளுக்குச்சி, வதிச்சட்டி, கடகால், கொத்துக் கரண்டி, காலுருட்டிக் கட்டை, கயிறு, மூங்கில், தென்னை மட்டை, திருகை, பூவரச இலை, மழைக்காகிதம், சாக்கு, அம்மிக்கல், ஈச்சங்குச்சிகள், கோழி இறக்கைகள், அணில்வால் தூரிகை போன்ற மிக எளிமையான பொருள்கள் இவர்களின் கலைப்படைப்பிற்கு கருவிகளாக உதவுகின்றன.
மாடுகளுக்கு நோய் வந்தால், சிறிய மாடுகளின் சுடுமண் சிலைகளைச் செய்து சங்கரன் கோயிலுக்கு அருகில் உள்ள ஊமையன் கோயிலுக்கு நேர்ந்து காணிக்கையாக அதைச் செலுத்தினால், மாடுகளுக்கு வந்திருக்கும் நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை எங்கள் வட்டார மக்களிடம் உள்ளது.
இதேபோல், தவளும்பிள்ளைகளின் உருவம் செய்து காணிக்கையாகச் சில கோயில்களுக்கு வழங்கும் பழக்கமும் இப்பகுதி மக்களிடம் உள்ளது. இத்தகைய செயல்பாடுகளில், பாவனை மந்திரம் என்ற உளவியல் சார்ந்த நம்பிக்கை ஆட்சி செய்கிறது.
குயவர்கள் மண்சிலைகளைக் கீழிருந்து மேல்நோக்கிச் செய்கிறார்கள்(சிற்பிகள் கல்லில் மேலிருந்து கீழ் நோக்கிச் சிலையைச் செதுக்குவார்கள்). முதலில் பீடமும், அதன்பின் பாதமும் வைப்பார்கள். பிறகு பீடத்தை ஒட்டிக் கால்வரை வளர்ப்பார்கள்.
அதன்பின் தனியாக ஒரு இடத்தில் இடுப்பு முதல் கழுத்து வரை செய்வார்கள். பிறகு முகம், தலை என்று தனித்தனியாகச் செய்து காயவைத்து பின்னர், அவைகளை ஒன்று சேர்த்து முழு உருவத்தை உருவாக்கி விடுவார்கள்.
இப்படி உருவாக்கிய உருவத்தை(சான்றாக குதிரையை) கவனமாகச் சுள்ளையில் வைத்துச் சுடுவார்கள். சுட்ட சிலையில் சிற்சில இடங்களில் விரிசல் இருந்தால், மணமண, கருப்பட்டி, சிமெண்ட் கலந்த கலவையால் அந்த இடத்தில் பூசி விரிசல் பிறர் கண்ணுக்குத தெரியாமல் சரி செய்து விடுவார்கள்.
இப்படி உருவாக்கிய சுடுமண் சிலைகளின் மேல் விதவிதமான வண்ணங்களைப் பூசி அச்சிலைகளுக்கு மேலும் அழகூட்டினார்கள். பெயிண்டுகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பல்வேறு வண்ணக் கலவைகளை இயறகையில் கிடைக்கும் பொருள்களில் இருந்து உருவாக்கிக் கொண்டார்கள்.
கறுப்பு வண்ணத்தை சிரட்டையை (கொட்டாங்குச்சியை) எரிந்த கரியுடன், சுடுசோறு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து தயாரித்தார்கள். நிறமற்ற மண்ணோடு, அவிக்காத பச்சை மஞ்சளையும் சேர்த்து அரைத்து, மஞ்சள் நிற கலவையைத் தயாரித்தார்கள்.
செம்மண்ணையும், மஞ்சளையும் சேர்த்து, ஒரு குடுவையில் இட்டு, குடுவையை எரியும் சுள்ளையின் நடுவில் வைத்துச் சூடாக்கி, காவி நிறக்கலவையைத் தயாரித்தார்கள்.
இதே போல வாவரக்காச்சி என்ற மரத்தின் இலைகளில் இருந்து பச்சை வண்ணத்தைத் தயாரித்துக் கொண்டார்கள்.
‘காக்காய்ப் பொன்’ என்று ஒரு கனிமம், பூமியில் சில இடங்களில் கிடைக்கிறது. மண்போலவே இருக்கும் இத்துகள்கள் ‘ஜிகினா’ போன்று மின்னும் இக்கனிமத்துடன் சில சேர்மானங்களைச் சேர்த்து, ஒரு குடுவையில் இட்டு, அதை எரியும் சுள்ளையில் வேகவைத்துப் பொன் நிறக்கலவையைத் தயாரித்திருக்கிறார்கள்.
வெட்டவெளியில் காற்று, மழை, வெயில் என்ற இயற்கையின் தாக்குதல்களையும் எதிர்கொண்டு இவர்களின் வண்ணப்பூச்சுகள் மிளிர்கின்றன.
இவர்கள் ‘வேளார்’ என்ற மாற்றுப் பெயரால், சில வட்டாரங்களில் அழைக்கப்படுகின்றார்கள். ‘வேள்’ என்றால் ‘மண்’ என்று பொருள் மண்ணை, ஆள்கின்ற(கையாள்கின்ற) இக்கலைஞர்களை ‘வேளார்’ என்று அழைப்பதும் பொருத்தம்தான்.
‘வேள்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்துதான் வேளாண்மை, வேளார்(விவசாயம் செய்கிறவர்) போன்ற சொற்கள் உருவாகின. நாலடியாரும் இச்சொல்லை “வேளான் என்பான் விருந்திருக்க உண்ணான்.” என்ற பாடல் வரியில் குறிப்பிடுகின்றார். மண்ணை உழுது மகசூல் செய்கின்றவர்களை ‘வேளார்’ என்று அழைப்பதும் பொருத்தம்தான்.
பூமித்தாயின் மடியில் கிடக்கும் மண்ணை மூலதனமாகக் கொண்டு தன் உழைப்பாலும், கலை உள்ளத்தாலும் மண்ணை மாண்புறச் செய்யும் இக்கலையாளர்களை தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுப் பிரதிநிதிகள் என்றும் கூறலாம்.

சிறுதெய்வ நெறிகள்


சிறுதெய்வ ஆய்வு நாட்டுபுறப் பண்பாட்டியலின் ஒரு பெரும் பிரிவாகும். இந்த வகையான ஆய்வு தமிழ்நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளேதான் தொடங்கப்பட்டது. சரியாகச் சொல்வதானால், இந்த ஆய்வுத்துறை தமிழ்நாட்டில் இப்பொழுதுதான் பிள்ளைப் பருவத்தில் உள்ளது. இந்த வகையான ஆய்வுச் சிந்தனையைத் தொடங்கியதில் தாமரை, ஆராய்ச்சி போன்ற இதழ்களுக்கே பெரும்பங்குண்டு. சொல்விளக்கம்முதலில், நாம் தமிழில் ''சிறுதெய்வம்'' என்ற சொல்லின் தோற்றத்தை நோக்குவோம். இச்சொல் முதன்முதலாக ''சென்று நாம் சிறுதெய்வம் சேரோம் அல்லோம்'' என்று அப்பர் தேவாரத்தில் பயின்று வருகிறது. இதன் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆகும். இதற்கு நேர்மாறாகப் ''பெருந்தெய்வம்'' என்ற சொல்வழக்கு புறநானூற்றிலேயே காணப்படுகிறது. இரண்டு வேந்தர்களையும் ஒன்றாகக் கண்ட புலவர், ''இரு பெருந்தெய்வமும் உடன் நின்றா'' அங்கு (பாடல் எண்:58) என்று பலராமனையும் திருமாலையும் நினைத்துப் பாடுகிறார். எனவே, சமூகத்தின் அடித்தளத்து மக்கள் (Subalterns) வழிபடும் கடவுளரைச் சிறுதெய்வங்கள் எனவும், மேல்தளத்து மக்கள் வழிபடும் தெய்வங்களைப் பெருந்தெய்வம் எனவும் குறிப்பிடும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்திருப்பதாகத் தெரிகிறது.ஆய்வு நெறியில் ''சிறுதெய்வம்'', ''பெருந்தெய்வம்'' என்ற சொற்களைத் தாழ்ந்தவை, உயர்ந்தவை என்ற பொருளில் எடுத்துக்கொள்ள இயலாது. உண்மையில் சிறுதெய்வங்கள் எனப்படுபவையே மிகப்பழைய நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் பேணி நிற்பவையாகும். இக்கட்டுரையில் சிறுதெய்வம் என்ற சொல் நாம் ''பழகிவிட்ட சொல்'' என்பதனாலேயே எடுத்தாளப்படுகிறது.கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் குமரகுருபரர், ''செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாளன்'' என்று முருகனைக் குறிப்பிடுகின்றார். இப்பாடலில் செத்துப் பிறப்பனவாக அவர் குறிப்பது சிறுதெய்வங்களையே என்று ஊகிக்கலாம்.''சிறு தெய்வம்'' என்ற சொல் எதைக் குறிக்கும்? சிறு தெய்வங்களின் முதற்பண்பு அவை பிராமணரால் பூசை செய்யப் பெறாதவை ஆகும். பிராமணப்பூசை இன்மையால் இவை இயல்பாகவே இரத்தப்பலி பெறும் தெய்வங்களாகும். இத்தெய்வங்கள், நாள்தோறும் ஆறுகாலப் பூசை பெறுவதில்லை. இத்தெய்வங்களின் திருவிழக்களில் ''சாமியாட்டம்'' (Ectasy) இடம்பெறும்.வழிபடுவோர்சிறுதெய்வ வழிபாடு சமூகத்தில் எப்பிரிவினரிடம் தொல்வழக்காக உள்ளது என்பது அடுத்த கேள்வி பொதுவாக, பிராமணரல்லாத எல்லாச் சாதியினரும் சிறுதெய்வ வழிபாட்டை உடையவர்கள் ஆவர். பிராமணரல்லாத சாதியாரிடமும், சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டுள்ள புலாலுண்ணாத வேளாளரிடத்தில் சிறுதெய்வ வழிபாடு மிகக்குறைவாக உள்ளது. நிலவுடைமை அமைப்பில் பிற எல்லாச் சாதியாரும் சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டவரே.கோயில் அடையாளம்சிறுதெய்வக் கோயில்களின் அளவு மிகச் சிறியது. சில இடங்களில் அவை கட்டடமின்றி அமைதலும் உண்டு. இன்னும் சில இடங்களில் மரங்களும், புதருமே தெய்வமாகக் கருதி வழிபடப்பெறும். மரங்கள் பெரும்பாலும், வேம்பு, பனை, பூவரசு, உடை ஆகியவையாக இருக்கும். பெண்தெய்வக் கோயில்கள் பெரும்பான்மை வடக்கு நோக்கியும், சிறுபான்மை கிழக்கு நோக்கியும் ஆண்தெய்வக் கோயில்கள் கிழக்கு நோக்கியே அமைவதும் மரபாகும். ஒரு சிறுதெய்வக் கோயிலில் பெரும்பாலும் ஒரு தெய்வம், அல்லது மூன்றிலிருந்து இருபத்தொரு தெய்வங்கள்வரை வடக்கு, கிழக்கு, தெற்கு நோக்கி அமைந்திருக்கும்.பெயர்கள்சிறு தெய்வங்களின் பெயர்கள் பெருந்தெய்வங்களின் பெயர்களிலிருந்து தெளிவாகவே வேறுபட்டு நிற்கின்றன. ஆண் சிறு தெய்வங்களின் பெயர்கள் பொதுவாக அய்யா, அப்பன், அடியான், சாமி முதலிய விகுதிகளோடும், (கருப்பையா, இருளப்பன், பனையடியான் கருப்பசாமி) பெய்தெய்வங்களின் பெயர்கள் அம்மன், நாச்சி, கிழவி முதலிய விகுதிகளோடும் (முத்தாலம்மன், பெரியநாச்சி, அரியாக்கிழவி) அமைந்திருக்கும்.கோயில் அமையும் இடங்கள்இச்சிறுதெய்வக் கோயில்கள் பொதுவாக ஊர்மந்தை, ஊரின் எல்லை, குளக்கரை, கண்மாய்க்கரை, களத்துமேடு, வயற்புறம்; அழிந்த கோட்டைகளில் வாசற்பகுதி இருந்த இடம், நெடுஞ்சாலை ஓரம் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும். அந்த இடங்கள் அனைத்தும் காவலுக்குரிய இடங்கள் ஆகும். எனவே, பெரும்பாலான சிறுதெய்வங்கள் காவல் தெய்வங்களாக (Guardian deities) அமைவனவே.உருவம்பெண் சிறுதெய்வங்கள் பீடத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் இரண்டு கைகளோடு, தலையில் வெவ்வேறு வகையான மகுடங்களுடன் இருக்கும். கையில் வேல், வடிந்த காது, கழுத்தில் காறை, காலில் தண்டை ஆகியவற்றோடு அமைந்திருக்கும். ஒன்றிரண்டு தனித்த வேறுபாடுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக, உச்சினி (உஜ்ஜயினி) மாகாளியம்மன் இடது உள்ளங்கையில் கபாலம் ஏந்தியிருக்கும். சில பெண்தெய்வங்கள் இடுப்பில் குழந்தை ஒன்றை வைத்திருப்பதாக நாட்டுப்புறப் பாடல்களிலும், வழக்கு மரபுகளிலும் செய்திகள் உள்ளன. ஆண்தெய்வங்கள் நின்ற கோலத்திலும், ஒரு காலை மட்டும் முழங்காலிட்ட கோலத்திலும, தவழ்ந்த கோலத்திலும் காணப்படும். ஒரு காலை முழந்தாளிட்ட நிலைமையில், ஒரு கை (வலக்கை) ஓங்கிய நிலையில் ஆயுதம் ஏந்தி இருக்கும் இத்தோற்றத்தில் அமைந்த தெய்வங்களை ''நொண்டிச்சாமி'' என்பார்கள். தவழ்ந்த கோலத்தில் அமைந்த தெய்வங்களைச் ''சப்பாணி'' என்பார்கள். தெய்வ உருவங்கள் பெரும்பான்மை கல்லிலும், சிறுபான்மை மண்ணாலும் அமைந்திருக்கும். மண்ணால் (சுதையால்) அமைந்த தெய்வங்கள் வண்ணங்கள் பூசப்பெற்றவையாக இருக்கும்.கிடந்த கோலத்தில் ஒரே ஒரு தெய்வம் மட்டும் கள ஆய்வில் இதுவரை காணப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மேற்குப் பகுதியிலும், குமரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும், காணப்படும் இத்தெய்வத்திற்கு ''வண்டிமலைச்சியம்மன்'' என்று பெயர். இந்தப் பெயருடைய அம்மன் கோயில்களில் இரண்டு உருவங்கள் மிகப்பெரிய அளவில் மண்ணால் அமைக்கப்பட்டிருக்கும்.சிறுதெய்வமா, பெருந்தெய்வமா என்று உறுதியிட்டுரைக்க முடியாதபடி மிகச் சில தெய்வங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ''காமாட்சி அம்மன்'' ஆகும். தமிழ்நாட்டின் பழம்பெரும் கோயில்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் ஒரு பெருந்தெய்வக் கோயிலாகும். ஆயினும், தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் காமாட்சியம்மன் பிராமணப் பூசையின்றி இரத்தப்பலி பெறும் சிறுதெய்வமாகவே காணப்படுகிறது. எனவே, காமாட்சி அம்மன் முதலில் சிறுதெய்வமாக இருந்து, இடைக்காலத்தில் பெருந்தெய்வமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.உருவமில்லாதனசிறுதெய்வக் கோயில்களில் உருவம் இல்லாதன, உருவம் உடையன என இருவகை உண்டு. மரங்களையே தெய்வங்களாக வழிபடுதல் ஒரு வகையாகும். சில இடங்களில் கல்லாலான கழுமரங்களே வழிபடப்பெறுகின்றன. சில இடங்களில் பீடங்கள் மட்டும் உருவமின்றி வழிபடப்பெறுகின்றன. அழகர்கோயிலில் பதினெட்டுப் படிகளும், படிகளுக்கு முன்னமைந்த இரண்டு கதவுகளுமே தெய்வமாகக் கருதி வழிபடப் பெறுகின்றன. இன்னும் சில இடங்களில் நடப்பட்ட குத்துக்கற்களில் தெய்வம் உறைவதாக நம்பி வழிபடுவர். தெய்வங்கள் பந்தியாக (வரிசையாக 21 தெய்வங்கள்) அமைந்த கோயில்களில் முக்கியமான ஒன்றிரண்டு உருவங்களையும், பிற தெய்வங்கள் பீடங்களாகவும் வழிபடப்படுகின்றன.வழிபடுகடவுளர் இயல்புஉருவமுடைய சிறுதெய்வங்கள் எல்லாம், அவை ஆணாயினும், பெண்ணாயினும் ஆயுதங்களை ஏந்தியிருப்பது அவற்றின் பொதுப் பண்பாகும். எனவே, சிறுதெய்வங்கள் அனைத்தும் வீர வழிபாட்டுத் தெய்வங்கள் எனக் கருதப்படுகின்றன. தன்னுடைய ஊரை, ஊரின் கால்நடைகளை, கண்மாய் நீரை, பெண்களை, விளைந்த பயிர்களைக் காக்கின்ற சண்டையில் உயிர்துறந்த ஆண்கள் எல்லாம் வீர வழிபாட்டிற்கு உரியவர்களாவர். இவர்களுக்குத் தனிப்பெயர் இருந்தாலும் வேடியப்பன், பட்டவன் என்ற பொதுப் பெயர்களில் வடமாவட்டங்களிலும் மதுரை, முகவை மாவட்டங்களில் கருப்பசாமி என்ற பொதுப்பெயரிலும் நெல்லை, குமரி மாவட்டங்களில் சுடலைமாடன் என்ற பொதுப் பெயரிலும் இத்தெய்வங்கள் அடங்கிவிடும். இப்பொதுப் பெயர்கள் பொது வழிபாட்டுநெறி (Cult) ஒன்றை உருவாக்கிவிடுகின்றன.பெண் தெய்வங்களில் பகைவரால் கொல்லப்பட்டோர், பாலியல் வன்முறையை எதிர்க்கும் முயற்சியில் இறந்தோர், பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்கவும் அதை எதிர்க்கவும் தற்கொலை செய்துகொண்டோர், கணவனோடு உயிர் நீத்தோர் ஆகியோரை வீர வழிபாட்டிற்கு உரியவர்கள் எல்லாம் தங்கள் இறப்பிற்கு உரிய காலமல்லாத காலத்தில் தங்கள் இறப்பினை (அகால மரணத்தை)ச் சந்தித்தவர்கள் ஆவர்.வீரவழிபாட்டு நெறியில் இரண்டு சாரார் ஒரே தெய்வத்தை வழிபடுவதும் உண்டு. கொல்லப்பட்ட வீரனைச் சார்ந்த பிரிவினர் அவன் வீரத்தையும், பிற வரங்களையும் வேண்டி வழிபடுவர். கொன்ற பிரிவினர் கொல்லப்பட்ட வீரனின் ஆவியால் தாங்கள் பழிவாங்கப்படக்கூடாது என்பதற்காக ''சமாதானம்'' (சாந்திச் சடங்குகள் - Propitiatory rites) செய்து வணங்குவர்.பொதுவாகப் பெண்தெய்வ வழிபாடுகள் உடல்வளம், மனவளம், மகப்பேற்று வளம், பயிர்வளம், இவற்றையே குறிக்கோளாகக் கொண்டு நடைபெறும். அதாவது, மக்களையும் பயிர்களையும் நோய் வராமல் காத்தல், வந்த நோயிலிருந்து காத்தல், மனநலக் குறைவைச் சரிசெய்தல், மகப்பேறு வரந்தருதல், பயிரை நன்றாக விளையச் செய்தல் ஆகியவையே பெண் தெய்வத்தின் கடமைகளாக அமைகின்றன.பூசாரிசிறுதெய்வக் கோயில்களில் பிராமணரல்லாதாரே பூசாரிகள் ஆவர். பள்ளர், பறையர், சக்கிலியர், நாவிதர், வண்ணார் ஆகிய சாதியாரின் கோயில்களில் பெரும்பாலும் அந்தந்தச் சாதியாரே பூசாரிகளாக இருப்பர். பிற மேல் சாதியாருக்கு உரிமையான கோயில்களில் மண்பாண்டங்களும், மண்ணில் தெய்வ உருவங்களும் செய்யும் குயவர் (வேளார்) சாதியாரும், நந்தவனம் வைத்துப் பூத்தொடுக்கும் பண்டாரம் எனப்படும் சாதியாரும், உவச்சர் (கம்பர்) சாதியாரும் பூசாரிகளாக இருப்பர். ஒன்றிரண்டு கோயில்களில் அந்தந்தச் சாதியாரே (மறவர், கள்ளர்) பூசாரிகளாக இருப்பார்கள். பொதுவாக பிற தெய்வக் கோயில்களைப் போலச்சிறுதெய்வக் கோயில்களில் ஆறுகாலப் பூசைகள் நடப்பதில்லை.சாமியாடி - தோற்றமும் ஆட்டமும்பெரும்பாலும் சிறுதெய்வக் கோயில்களில் பூசாரிகள் சாமியாடிகளாக இருப்பதில்லை. வழிபடும் அடியர்களிலேயே ஒருவர், இருவர் அல்லது சிலர் சாமி ஆடுவர். இரண்டு மூன்று சாதிகளுக்குரிய கோயில்களில் சாதிக்கொரு சாமியாடியும் உண்டு. பெண்தெய்வக் கோயில்களில் ஆண்களும் ஆண்தெய்வக் கோயில்களில் பெண்களும் ஆடுவதுண்டு. சாமியாட்டம் திருவிழாக் காலங்களில் மட்டுமே நடைபெறும்.சாமியாடுவோர் ஆண்களாக இருப்பின் வேட்டியை வரிந்துகட்டியும், பெண்களாக இருப்பின் தலைமுடியை விரித்துப்போட்டும் சாமியாடுவர். சாமி ஆடுபவர் கையில் வேப்பிலையும், எலுமிச்சம் பழமும் இருக்கும். அந்தக் குறிப்பிட்ட சிறு தெய்வத்திற்குரிய ஆயுதங்கள் - கருவிகள் ஆன அரிவாள், வாங்கரிவாள், சிறு பிரம்பு, பூண் கட்டிய தடிக்கம்பு, சாட்டை, வாள், கட்டாரி ஆகியவற்றில் ஒன்றை ஏந்தி ஆடுவர்; தீப்பந்தம், தீச்சட்டி ஏந்தியும் ஆடுவர். மதுரை, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஒருவர் நீர்க்கரகம் எடுத்துத் தெய்வப் பிரதிநிதியாக ஆடுவார். அவருக்குக் ''கோமறத்தாடி'' எனப் பெயர். அவர் மஞ்சள் ஆடை அணிவார். கையில் வெள்ளிக் கடகம், மஞ்சள் காப்புக்கயிறு அணிவார். சில சிறுதெய்வக் கோலில்களில் சிவப்பு வண்ணக் கால்சட்டை அணிந்து காலில் சலங்கை கட்டி ஆடுவர். சிவப்புக் கால்சட்டையோடு, சிவப்புத் தொப்பியணிந்து ஆடுவதும் உண்டு. பொதுவாக எல்லாச் சிறுதெய்வக் கோயில்களிலும் சாமி ஆடுவோர், திருவிழாவிற்கு முன்னர் 10 அல்லது 15 நாள் தொடங்கிப் புலால் உண்பதைத் தவிர்த்தும், உடலுறவைத் தவிர்த்தும் விரதமிருப்பர். இன்னும் சில கோயில்களில் பூசைசெய்யும் நேரத்தில் பூசை செய்வோர் வாயினை ஒரு வெள்ளைத் துணியினால் கட்டிக்கொள்வர்.சிறுதெய்வக் கோயில்களில் நடைபெறும் சாமியாட்டம் அல்லது தெய்வ ஆட்டம் பலவகைப்படும். பெரும்பாலும் ''திமிரி'' என்னும் சிறிய வகை நாட்டுப்புற நாதஸ்வர இசைக்கும், மேளத்திற்கும் ஏற்ப ஆண்களும் பெண்களும் குதித்தாடுவார்கள். பெண்கள் தலைமயிர் விரித்த தலையை முன்னும் பின்னுமாக ஆட்டி ஆடுவார்கள்.பொதுவாக ஒரு சிறுதெய்வம் இரண்டு அல்லது மூன்று பேர் மீது மருள் கொண்டு இறங்கும் ''மருளாடி'' சாமியாடி'' ''கோமறத்தாடி'' என ஒவ்வொரு வட்டாரத்திற்கும் சாமியாடுவோர் பெயர் வேறுபடும். சாமியாடுவோரில் ஒருவர் மட்டுமே தெய்வத்தின் பிரதிநிதிபோலக் கையிலோ தலையிலோ கரகம் வைத்து ஆடுவார். பிறர் ஆயுதங்களை ஏந்தியோ, வேப்பிலை, எலுமிச்சம் பழம் மட்டும் கையில் வைத்துக்கொண்டோ ஆடுவர். ஆடுவோர் எல்லோரும் கழுத்தில் பூமாலை அணிவர்.பொதுவாக இவ்வகையான ஆட்டம் தவிர வெவ்வேறு வகையான ஆடல்களும் சில இடங்களில் நடைபெறும். இவற்றுள் வட்டார வேறுபாடு உண்டு. தென் மாவட்டங்களில்தான் இப்பொழுது பல்வகையான ஆட்டங்களைக் காணும் வாய்ப்பு உள்ளது.விழாக்களும் இரத்தப் பலியும்சிறுதெய்வக் கோயில்களில் திருவிழாக்கள், பெரும்பாலும் மாசிமாதத்தில் ''மகா சிவராத்திரி''யன்று நடைபெறும். இத்திருவிழாவினை ''மாசிக்களரி'' என்பர். நெல்லை, குமரி மாவட்டங்களில் மட்டும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும். திருவிழாக்களின் உச்சக்கட்ட நிகழ்ச்சியாக இரத்தப்பலி நடை பெறும். எருமைக்கடா, ஆட்டுக்கடா, சேவல், பன்றி ஆகியவை பலியிடப்பெறும்.பொதுவாகத் தமிழ்நாட்டில் இக்காலத்தில் கோவை மாவட்டத்தில் ஒன்றிரண்டு இடங்களைத் தவிர எருமைக்கடா பலிகொடுக்கும் வழக்கம் நின்றுபோயிற்று. எருமைக்கடா பலிபெறும் பெண்தெய்வங்கள் மைசூர்ப் பகுதியில் உருவான மகிஷாசுரமர்த்தினி (எருமைத்தலை அரக்கனைக் கொன்ற காளி) வழிபாட்டில் இருந்து கிளைத்திருக்க வேண்டும். அலைந்து திரியும் (nomadic) சாதியாரான நரிக்குறவர் இக்காலத்திலும் தங்கள்தெய்வத்துக்கு எருமைக்கடா பலி கொடுக்கின்றனர்.விதிவிலக்காக அன்றிப்பெண் விலங்குளையோ, பறவைகளையோ பலிகொடுக்கும் வழக்கம் வழிபாட்டு நெறிகளில் இல்லை. இரத்தப்பலி என்பது பொதுவாக ஆண் விலங்குகளையும் பறவைகளையுமே குறிக்கும். உயிர்ப் பெருக்கத்திற்குக் காரணமான பெண் உயிர்களைப் பலி கொடுத்தால் தெய்வம் தண்டிக்கும் என்னும் தொல்பழைய நம்பிக்கையே இதற்குக் காரணமாகும். சங்க இலக்கியத்தில் நன்னன் என்னும் ஒருவன் பெண் கொலை செய்து பெரும்பழி ஏற்றதனைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.தாழ்த்தப்பட்ட சாதியார் ஆன சக்கிலியர் போன்ற சாதிகளில் மட்டுமே பன்றியைப் பலி கொடுப்பர். வெட்டப்பட்ட மிருகத்தின் தலையினை மட்டும் எடுத்துத் தெய்வத்திற்கு நேர் எதிரே கோயிலுக்கு உள்ளாகவோ, வெளியிலோ அமைந்திருக்கும் பலிபீடத்தின் மேல் வைப்பர். சில தெய்வங்களுக்குப் பலியிடும் விலங்கின் தலையை வெட்டாமல் நெஞ்சினைக் கீறி இருதயத்தை மட்டும் எடுத்துப் பலிபீடத்தின் மேல் வைப்பர்.பெண் தெய்வங்களில் சில தெய்வங்களுக்கு இரத்தப்பலி தரும்போது, நிறை சினையாகவுள்ள பெண் ஆட்டைத் தேர்ந்தெடுத்து, ஊருக்கு வெளியே அதைக் கொண்டுபோய் அதன் வயிற்றைக் குத்திக்கிழித்து, உள்ளே இருக்கும் ஆட்டுக்குட்டியைத் தனியே வெளியே எடுத்துக் கோயிலில் அத்தெய்வத்தின் பலிபீடத்தில் வைப்பர். இதற்குச் ''சூலாடுகுத்துதல்'' அல்லது ''துவளக்குட்டி'' எனப் பெய்ர. ஒரு கோயிலில் ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்கள் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பலிபீடமும் இருக்கும்.தெய்வகங்கள் வரிசையாக அமைந்த கோயில்களில் ''அய்யனார்'' இருப்பினும் அது இரத்தப்பலி பெறாத தெய்வமாகும். எனவே அதே வளாகத்திலுள்ள பிற தெய்வங்களுக்கு இரத்தப்பலி இடும்போது, இரத்தப்பலி பெறாத அய்யனார் போன்ற தெய்வ உருவங்களைத் திரையிட்டு மறைத்துவிடுவர். இரத்தப்பலி பெறாத தெய்வங்களை நாட்டுப்புறத்து வழக்கு மரபில் ''சுத்தமுகத்தெய்வம்'' என்று கூறுவர்.பிற படையல்சிறுதெய்வங்களுக்குப் படைக்கப்படும் உணவு வகை என்று எதையும் குறிப்பிட இயலவில்லை. திருவிழாவில் இறுதி நிகழ்ச்சியாகச் சில தெய்வங்களுக்கு ஊன் (ஆட்டுக்கறி) கலந்த சோறு படைக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் இதற்குத் ''திரைச்சோறு'' எனப்பெயர் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ''ஊட்டுக்கொடுத்தல்'' என்பர். பொதுவாக, சிறுதெய்வக் கோயில்களில் வழிபடுவோர்க்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ''தெய்வம்'' தன்மிது குடிகொண்டுவிடுமூ என்ற அச்சத்தினால் குறிப்பிட்ட சில சிறுதெய்வக் கோயில்களில் தரப்படும் (தெய்வத்திற்கு சூட்டிய) பூவினைப் பெண்கள் அணிந்துகொள்வதில்லை.நேர்த்திக்கடன்காணிக்கை அல்லது நேர்த்திக்கடனாகச் சிறுதெய்வக் கோயில்களுக்கு நெல் முதலிய தானியங்கள் தரப்படுகின்றன. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தைவரம் வேண்டி ''பிள்ளைத் தொட்டில்'' (மரத்தாலான மிகச்சிறிய தொட்டில்) செய்து கோயிலில் தொங்கவிடும் வழக்கமும் பரவலாக உள்ளது. எல்லாச் சிறு தெய்வக் கோயில்களிலும் தெய்வத்திற்குரிய ஆயுதங்களை (வேல், வாள், தடி, கட்டாரி, அரிவாள்)யும் சாட்டை, பாதுகை, மணி திருநீற்றுக் கொப்பரை முதலியனவற்றையும் அடியவர்களே நேர்த்திக்கடனாகச் செய்து தருகின்றனர்.சமூக மாற்றம் இருபதாம் நூற்றாண்டில் சமூக மாற்றங்கள் காரணமாகப் பெண் சிறுதெய்வங்களில் சில பெருந்தெய்வமாக மாற்றப்பட்டுள்ளன. இரத்தப் பலியினை நிறுத்துவது, பெருந்தெய்வக் கோயில்களைப் போலப் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவினைக் கொண்டாடுவது, சில இடங்களில் பிராமணரைப் பூசாரியாக்குவது முதலிய படிநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. சில கோயில்களில் ''சாமியாட்டம்'' காலப்போக்கில் ஆடுவோரின்று மறைந்து இம்மாற்றத்திற்கு மேலும் துணை செய்கிறது. ஒரு கோயிலை வழிபடும் அடியவர்கள் சமூக மாற்றங்களினால் பொருளாதார வலிமை பெறுவதும், பணக்காரர் அறங்காவலர் பொறுப்புக்கு வருவதும் இம்மாற்றத்திற்கு அடிப்படைக் காரணங்களாகும். இம்மாற்றமும் நகர்ப்புறங்களில்தான் பெருமளவில் நடந்துள்ளது.


நன்றி: தெய்வங்களும் சமூக மரபுகளும்

கும்பாரன் குரல்






























கும்மார ஸெத்த '

அதாவது கும்பாரன் குரல்.
இது ஒரு புதிய மலையாள மாத இதழ்.
மலையாளத்தில்
கும்மார ஸத்தெ '
என்ற சொற்றொடர் கிடையாது. '

இது கும்பார மொழிப் பத்திரிகை.
கும்பார மொழி ?

கேரளத்தில் நிலாம்பூர் பிரதேசத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு சிறிய இனக்குழுவால் பேசப்படும் மொழி. இவர்கள் எல்லோரும் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் ஆந்திராவிலிருந்து, தமிழகம் வழியாகக் கேரளம் போய்ச் சேர்ந்தவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று கலந்து சேர்ந்த மொழிதான் கும்பார மொழி. இதற்கு வரிவடிவம் கிடையாது என்பதால், கும்பார இனத்தவர்கள் தங்களுக்குப் பழக்கமான மலையாள வரிவடிவத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

கும்பாரர்,

குலாலர் (மண்கல வினைஞர்கள்)

இனம் என்கிறது மாத்ருபூமி செய்தி.
தொழில் அடிப்படையில் ஒன்று சேர்ந்த ஓர் இனக்குழு

தனியாக ஒரு மொழியை

உருவாக்கிப் பயன்படுத்துகிறது என்பது எவ்வளவு தூரம் சரியானது என்று சமூகவியலாளர்கள் தான் சொல்லவேண்டும்.
ஓ! பாரதி!




தமிழ் ஆசிரியர்மாணவரிடம் கேட்டார்`





`பாரதி யார்?

அவரைப் பற்றிஉனக்கென்ன தெரியும்?''

முதல் வரிசை மாணவன்முந்திக் கொண்டான்.

``ஐயா, பாரதிஒரு முன்னாள் நடிகை!

அவருக்கு கழுத்துக்குக் கீழேஒரு மச்சம் உண்டு!