கொக்குகள் மேலே பறக்கின்றன.
தப்பிய வயலின் தானியமோ
மக்காத குப்பைகளின் புழுக்களோ
அதன் அலகுகளில் ஞாபகங்களாய் நெளிகிறது.
விரல் நகங்களுக்கு வெண்பூக்கள்
வேண்டிசிறுவர்கள் யாசிக்கையில்
அவைகள் தரையிறங்குகின்றன.
நீளமான காலின் அதிசயங்களைகரைகளில்
விட்டுவிட்டுசிறுவர்கள்
மறைந்து விடுகிறார்கள்.
கருவேலங் குத்தாரிகளிலும்மீன்கள்
கருத்தரிக்கும் ஆதாளைச் செடி
மருங்கிலும்கால்களை வீடாக்கி வசிக்கின்றன.
ஊரின் நிர்வாணங்கள் வற்றும் அவைகளின்
கண்களில்துள்ளும் மீன்களை சிலர்தூண்டிலிட்டுக்
கொண்டு போகிறார்கள்.
சாம்பல் தோய்ந்த பூசணி
விதைகளைஉலர்த்தும் வெயில்


மாந்தளிர்களைப் பச்சையாக்குகிறது.
பின்பனிக்காலத்தோடு புறப்பட்டுவிட்ட
சிறுமிகளுக்கு தோழிகள்
கையசைக்கையில்வறண்டுவரும்
குளத்தினைக் கொத்திக்கொண்டுபறந்து
செல்கிறது கடைசிக் கொக்கு.

No comments: